சினிமா செய்திகள்

விவாகரத்து விவகாரம்: நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவா?

Published

on

நடிகை சமந்தா தனது கணவர் சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் ஒரு சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவதை அடுத்து இது குறித்து நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா, பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப்சீரிஸ்ஸில் படுக்கையறை காட்சிகளில் நடிகை சமந்தா நடித்ததால் நாகார்ஜுனா குடும்பத்தினர் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து சமந்தா திடீரென தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கினார். இதனால் சமந்தாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்ற வதந்தி மிக வேகமாக பரவியது.

மேலும் அவர் தனது கணவரை விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் சமூக வலைதளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமந்தாவுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் ரூபாய் 50 கோடி ஜீவனாம்சம் வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறு செய்திகளும் வதந்திகளும் வெளியாகி வருவதை அடுத்து இது குறித்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகள், அவதூறு செய்திகள் பரவி வருவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version