சினிமா செய்திகள்

வைஜயந்தி ஐபிஎஸ் ரீமேக் படத்தில் சமந்தா? அதிரடி ஆக்சனுக்கு தயாராகிறார்?

Published

on

கடந்த 1990ஆம் ஆண்டு விஜயசாந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் வைஜெயந்தி ஐபிஎஸ். தெலுங்கில் வெளியான இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்ட நிலையில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 90 லட்சம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும், தேசிய விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தை 32 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தில் விஜய் சாந்தி கேரக்டரில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .

இந்த படத்திற்காக சமந்தா அதிரடி ஆக்ஷனில் களமிறங்க உள்ளார் என்றும் முன் பயிற்சிகள் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version