சினிமா

சல்மான் கானின் வீரம் இந்தி ரீமேக்! சாதித்ததா? ரம்ஜான் பண்டிகை அதுவுமா சோதித்ததா?

Published

on

பாலிவுட்டில் வசவசன்னு ஏகப்பட்ட தென்னிந்திய படங்களின் ரீமேக் ரைட்ஸ்களை போட்டிப் போட்டு வாங்கி விட்டார்கள் போல, வரிசையாக நல்ல நல்ல படங்களை பல கோடி செலவு செய்து மொக்கைப் படங்களாக பாலிவுட்டில் மாற்றி வருகின்றனர்.

ஹாலிவுட் தரத்துக்கு சென்று கொண்டிருந்த பாலிவுட் திடீரென சவுத் பக்கம் தலை வைத்து படுக்க சரிவை சந்திக்க ஆரம்பித்தது.

#image_title

சமீபத்தில் அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ ஷெசடா எனும் பெயரி வெளியாகி பல்ப் வாங்கியது. கைதி படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் போலா எனும் பெயரில் எடுத்து போண்டி ஆகிப் போனார்.

இந்நிலையில், பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் வாங்கிய அடி போதாது என நினைத்து அஜித்தின் வீரம் படத்தை ரீமேக் செய்து நடித்து இன்னொரு பலத்த அடியை வாங்க உள்ளார் சல்மான் கான்.

#image_title

ஃபர்ஹத் சமாஜ் இயக்கத்தில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ், பூமிகா, ஜெகபதி பாபு, ஷெனாஸ் கில், பாலக் திவாரி என நடிகர்கள் பட்டாளம் இருந்தும் நட்புக்காக ராம்சரண் ஒரு வேட்டி டான்ஸ் போட்டு சென்றாலும் படத்தில் வரும் காமெடி மற்றும் காதல் போர்ஷன் தான் சல்மான் கானுக்கு மிகப்பெரிய எமனாக மாறி விட்டது.

ஷாருக்கான் மாதிரி தானும் லாங் ஹேர் லுக் வைக்கிறேன் என விக் வைத்துக் கொண்டு சல்மான் கான் நடித்த நிலையில், அதை பார்த்ததுமே ரசிகர்கள் சிரித்து விட்டனர்.

#image_title

அஜித் முடி ஏன் வெள்ளையாக ஆச்சு எனக் கேட்க டீ குடிச்சே வளர்ந்தேன் அதான் வெள்ளை ஆகிடுச்சு என சொல்வார். இங்கே முடிவெட்டாம இருக்கவும் சல்மான் கான் ஒரு விஷயத்தை சொல்வதை கேட்டதும் காமெடிக்கு சிரிக்காத பலரும் அந்த காட்சிக்கு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

தம்பிகளை பிரிந்து விடக் கூடாது என்பதற்காக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் சல்மான் பாயின் தம்பிகள் மூன்று பேரும் ஆளுக்கொரு பெண்ணை காதலித்து வருகின்றனர். எப்படியாவது தாங்கள் தங்கள் காதலியுடன் ஜோடி சேர அண்ணனுக்கு ஒரு காதலியை செட் செய்ய வேண்டும் என நினைக்கும் அவர்கள் கண்களில் பூஜா ஹெக்டே பாக்கியலக்‌ஷ்மியாக தோன்ற அவருக்கும் சல்மான் கானுக்கும் லவ் செட் செய்ய படாத பாடு படுகின்றனர்.

வீரம் படத்தை பார்த்தவர்களுக்கு அதன் பின்னர் படத்தின் கதை என்ன என்பது தெரிந்த ஒன்று தான். அதே கதை தான் மரண அடி ஸ்டன்ட் காட்சிகளை மட்டும் மாஸாக பல கோடிக்கு செலவு செய்து பாட்டுக்கு எல்லாம் செலவு செய்து எடுத்துள்ளனர்.

ஆனால், மெயின் கதை மற்றும் காமெடி, கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை ஒட்டாத நிலையில், கிஸி கா பாய் கிஸி கா ஜான் படம் இந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தியேட்டருக்கு சென்று படம் பார்க்க நினைத்த ரசிகர்களை சற்றே சோதித்து விட்டது.

ரேட்டிங்: 2/5.

seithichurul

Trending

Exit mobile version