சினிமா செய்திகள்

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் சல்மான் கான்!

Published

on

பாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் கமீட் ஆகியுள்ளார்.

இந்த ரம்ஜான் பண்டிகைக்கு சல்மான் கான் நடிப்பில் வெளியான பாரத் படம் மாபெரும் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலியின் இன்ஷா அல்லா படம் வெளியாகும் என்ற அறிவிப்பை இப்போதே படக்குழு அறிவித்து மாஸ் காட்டியுள்ளது.

மேலும், இந்த படத்தில் ஆலியா பாட் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கலன்க், கல்லிபாய் திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2020ம் ஆண்டும் ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படம் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் இன்ஷா அல்லா படங்கள் என ஆலியா பாட் நடிப்பில் இரு பெரும் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version