தமிழ்நாடு

சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர்: போலீசார் அதிரடி நடவடிக்கை!

Published

on

சமூக சேவகி என்று கூறிக்கொண்டிருக்கும் சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தி காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணி செய்து கொண்ட பெண் தொழிலாளிகளுக்கு தரமான உணவு வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்த நிலையில் திடீரென தரமற்ற உணவு வழங்காததால் 8 பெண்கள் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அந்த ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திடீரென சென்னை – பெங்களூர் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென தன்னைத்தானே சமூக சேவகி என்று சொல்லி கொண்டிருக்கும் சேலம் வளர்மதி சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களும் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினர்.

இந்த வதந்தியை அடுத்து ஆவேசமான பெண்கள் போராட்டத்திலும் அவலத்தை தீவிரத்தை காட்டியதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. அதன்பின் மாவட்ட கலெக்டர் போராட்டக்காரர்களிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வீடியோகால் மூலம் அந்த எட்டு பெண்களிடம் பேச வைத்தார். அதன் பின்னரே போராட்டக்காரர்கள் அமைதியகினர்.

பலமணி நேரம் நடந்த இந்த போராட்டம் காரணமாக சென்னை – பெங்களூர் சாலையில் செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அதில் பலரும் அலுவலகம் செல்ல வேண்டியவர்கள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டியவர்கள், மருத்துவமனையில் செல்ல வேண்டியவர்கள் இருந்ததால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வதந்தியை பரப்பி விட்ட சேலம் வளர்மதி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version