தமிழ்நாடு

இரவோடு இரவாக திடீரென காணாமல் போன நகைக்கடை: சேலம் தம்பதி எங்கே?

Published

on

சேலம் பகுதியில் இயங்கிவந்த நகைக்கடை ஒன்று இரவோடு இரவாக காணாமல் போனதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் பகுதியில் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகிய இருவரும் லலிதாதாம்பிகை ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்தனர். இந்த நகை கடையில் நகைச் சீட்டு நடத்தி வந்ததாகவும் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ரூபாய் 3000 மற்றும் 6 பவுன் தங்க நகை கொடுத்தால் அதற்கு மாதம் 2500 வட்டியும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஏராளமானோர் நகைச் சீட்டில் சேர்ந்ததாகவும் நகைகளை கொடுத்ததாகவும் தெரிகிறது இந்த நிலையில் இன்று திடீரென கடை திறக்கப்படாததால் அந்த கடையில் முதலீடு செய்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மூன்று நாட்களுக்கு விடுமுறை என கடையின் முன் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

இதனை அடுத்து நகைக்கடையில் முதலீடு செய்த பொதுமக்கள் தங்கராஜ் வீட்டிற்கு சென்றபோது வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து நகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அதில் உள்ள சிசிடிவி காட்சியை பார்த்த போது நகை கடையில் உள்ள நகைகள் முழுவதையும் காரில் ஏற்றிக்கொண்டு தம்பதிகள் இருவரும் தப்பி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா மீது மோசடி புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தம்பதிகள் ரூபாய் 4 கோடி வரை சுருட்டி கொண்டு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Trending

Exit mobile version