சினிமா செய்திகள்

ஒரே படத்தில் இரட்டிப்பு ஆன ‘கே.ஜி.எஃப்’ யஷ் சம்பளம்… கன்னட சூப்பர்ஸ்டாரின் ஊதிய விவரம்!

Published

on

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவிலான நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கினார் யஷ். கேஜிஎஃப் படம் மூலம் கிடைத்த அங்கீகாரத்தின் மூலம் ஒரே படத்தில் இவரது சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

கன்னட மொழியில் எடுக்கப்பட்ட படம் கே.ஜி.எஃப். என்றாலும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. ஐந்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தற்போது கேஜிஎஃப் இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேஜிஎஃப் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதற்காக சில ஆண்டுகளேயே தனது உழைப்பாகக் கொடுத்துள்ளார் யஷ். இதற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த பிரம்மாண்ட வரவேற்பால் தற்போது யஷ் கேஜிஎஃப் 2 படத்துக்காக 30 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

மீண்டும் அடுத்து ஒரு தேசிய படத்தில் நடிக்கவும் யஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாகுபலி பிரபாஸ் உடன் இன்னொரு நாயகனாக ‘சலார்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்துக்கு நிச்சயமாக 50 கோடி அல்லது அதற்கும் அதிகமாகத் தான் ஊதியம் பெற்றிருப்பார் யஷ் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending

Exit mobile version