இந்தியா

வேலைநீக்க நடவடிக்கை மத்தியில் சம்பள உயர்வு.. இந்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

Published

on

ஒரு பக்கம் உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த ஆலோசனையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களும் சம்பள உயர்வை அறிவிக்க இருப்பதாகவும் சம்பள உயர்வு என்பது இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வேலை நீக்க நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய ஊழியர்களின் சம்பளம் 10.3 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு 10.6% சம்பளம் உயர்ந்த நிலையில் இந்த ஆண்டு சம்பள உயர்வு குறைவாக இருந்தாலும் பொருளாதார ஏற்ற இறக்கம் பற்றிய கவலைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி இரட்டை இலக்கத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா இங்க் என்ற நிறுவனம் நல்ல சம்பள உயர்வை வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கும் அதிகமான சம்பள உயர்வை வழங்கும் என்று அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முன்னேற்ற பாதையில் செல்லும் நிறுவனங்கள் சம்பள உயர்வு குறித்த ஆலோசனை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களும் சம்பள உயர்வு திட்டமிடலை செய்து வருகின்றன என்பதும் விரைவில் சம்பளம் உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வேலைநீக்க நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் ஊழியர்களின் முழு திறமையை கொண்டு வரவும் அவர்கள் உற்சாகமாக பணிபுரியவும் சம்பள உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்பதால் சம்பளம் உயர்வு அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைத்து உள்ளதாக தான் தெரிகிறது.

தனி நபர் செயல் திறனின் அடிப்படையில் சம்பள உயர்வு நிர்ணயம் செய்யப்படும் என்றும் சம்பள உயர்வு மட்டும் இன்றி சில பதவி உயர்வுகள் போன்ற நடவடிக்கையும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தகுதியற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மிதமானதாக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 2.8 சதவீதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எந்தெந்த துறைகளில் உள்ள நிறுவனங்களில் எவ்வளவு சம்பவங்களை உயர்வு என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

தொழில்நுட்ப தளம் மற்றும் தயாரிப்புகள்: 10.9%
உலகளாவிய திறன் மையங்கள்: 10.8%
தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைகள்: 10.7%
நிதி நிறுவனங்கள்: 10.1%
வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG)/ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் டூரபிள்ஸ் (FMCD): 10.1%
உற்பத்தி: 9.9%
வாழ்க்கை அறிவியல்: 9.7%
சில்லறை விற்பனை: 9.7%
தொழில்முறை சேவைகள்: 11.2%
மின் வணிகம்: 12.2%
பிற சேவைகள்: 9.6%

seithichurul

Trending

Exit mobile version