தமிழ்நாடு

15 சதவீதம் ஊதிய உயர்வு: தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published

on

15% ஊதிய உயர்வு என பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சமக்ர சிக்‌ஷா அபியானில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1-ம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும், ஆனால் ஆலோசகர்களாக பணியாற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நவம்பர் 1-ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version