இந்தியா

நான் வரி கட்டுகிறேன், எனக்கு கேள்வி கேட்க உரிமை உண்டு: அரசை விளாசிய சாக்சி தோனி

Published

on

நான் வரி கட்டுகிறேன், அதனால் அரசிடம் இந்த கேள்வியை கேட்க எனக்கு உரிமை உள்ளது என சாக்சி தோனி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது என்பதும் இதற்கு நிலக்கரி பற்றாக்குறையே காரணம் என மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் மத்திய அரசு போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் மாநில அரசின் நிர்வாக திறன் சரியில்லாததால் தான் அந்தந்த மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக கூறி வருகிறது.

இந்த நிலையில் தோனி மனைவி சாக்சி தோனி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நான் பல ஆண்டுகளாக வரி கட்டி வருகிறேன். எனவே இந்த மாநிலத்தில் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது இந்த கேள்விக்கு ஜார்கண்ட் மாநில அரசு என்ன பதில் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version