சினிமா

உடை மாற்றுவது போல பெண்களை மாற்றும் கவின்: கொந்தளிக்கும் சாக்‌ஷி!

Published

on

பிக் பாஸ் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாக்‌ஷி, கவின் விவகாரம் முக்கிய பிரச்சனையாக வெடித்து சாக்‌ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.

கவின், சாக்‌ஷி இடையே பிரச்சனை உருவாக காரணம் கவின் சாக்‌ஷியை கழற்றிவிட்டுவிட்டு லாஸ்லியாவிடம் நெருக்கமாக பழகி வந்ததுதான். ஆனால் தற்போது சாக்‌ஷி பிக் பாஸ் வீட்டில் இல்லாததால் கவின் இஸ்டம் போல லாஸ்லியாவிடம் பழகி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் சாக்‌ஷிதான் தன்னிடம் முதலில் புரொப்போஸ் செய்ததாக மற்ற போட்டியாளர்களிடம் கவின் கூறியுள்ளார்.

இதனை தொலைக்காட்சியில் பார்த்த சாக்‌ஷி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் சாக்‌ஷி கவின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், கல்யாணம் செய்துகொள்ள நான்கு பாய்ண்டில் நீ வந்துவிட்டதாக என்னிடம் சொன்னார் கவின். ஷெரின் என்னைப் பார்க்க விருப்பப்பட்டால், கவின் வீட்டுக்குத்தான் வரவேண்டும் என்று சொன்னார்.

இப்படியெல்லாம் கவின் பேசக் காரணம் என்ன? நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளும் உடையைப் போல பெண்களை நினைக்காதீர்கள். உங்களுக்கு வேண்டுமென்றால் நாங்கள் அப்படித் தோன்றலாம். ஆனால், நாங்கள் அப்படியல்ல என்றார் அதிரடியாக. சாக்‌ஷியின் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version