இந்தியா

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக இளைஞர் நாடு திரும்புவாரா? திடீர் திருப்பம்!

Published

on

உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த கோவையை சேர்ந்த இளைஞருக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் ராணுவத்தில் புதிதாக ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து தங்கள் தாய் நாட்டை காப்பதற்காக போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் இராணுவத்தில் ஒருசில வெளிநாட்டினர் கூட இணைந்துள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கோவையை சேர்ந்த் சாய் நிகேஷ் என்பவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதாக புகைப்படங்களுடன் கூடிய தகவல் வெளியானதும்

தாய் தந்தை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டும் கூட சாய்நிகேஷ் தொடர்ந்து உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த சாய்நிகேஷ் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் தங்கள் மகன் நாடு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அடுத்து சாய்நிகேஷ் இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

 

seithichurul

Trending

Exit mobile version