தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது: குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகடமி விருது வழங்கப்படும் என்பதும் இந்த விருது ஒவ்வொரு எழுத்தாளர்களின் கனவு என்பது குறிப்பிடத்தக்கது

திரைப்படங்களில் ஆஸ்கார் விருதுக்கு நிகராகக் கருதப்படும் இந்த விருதை வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு எழுத்தாளரும் ஆசைப்படுவது உண்டு. அந்த வகையில் சற்று முன்னர் 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த அறிவிப்பில் பல்வேறு மொழிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழில் எழுத்தாளர் இமையம் என்பவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ’செல்லாத பணம்’ என்று நவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

சாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண், சாதியத் தன்னிலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு எவ்வாறு தன்னைப் பலிக்கொடுக்க வேண்டியுள்ளது என்ற யதார்த்தத்தை மிக நுட்பமாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

ப.பத்மினி, பேராசிரியர்,

தொடர்புக்கு: ramsrini.padmini@gmail.com

செல்லாத பணம் (நாவல்),

இமையம்,

க்ரியா வெளியீடு,

திருவான்மியூர், சென்னை,

விலை ரூ.270,

தொடர்புக்கு: 72999 05950

Trending

Exit mobile version