தமிழ்நாடு

20 தொகுதிகளில் போட்டியிடுகிறது சகாயம் அரசியல் பேரவை: முக ஸ்டாலினை எதிர்த்து யார்?

Published

on

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று அரசியலமைப்பு ஒன்றை தொடங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அவருடைய சகாயம் அரசியலமைப்பு 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சின்னத்தில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 20 இளைஞர்களை வேட்பாளர்களாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தனது தம்பிகளை போட்டியிட வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் இணைந்து எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள் என தெரிவித்துள்ளார்.

சகாயம் அரசியல் பேரவையிலிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மாணிக்கம் என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version