தமிழ்நாடு

எதை முன் வைத்து தேர்தலைச் சந்திக்கிறேன்?- சகாயம் பதில்

Published

on

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமின் ‘அரசியல் பேரவை’ எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளையும் இளைஞர்களை முன் வைத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் சகாயம். இந்நிலையில் எதை முன் வைத்து தேர்தல் களத்தில் இருக்கிறேன் என்பது குறித்து சகாயம் விளக்கம் அளித்துள்ளார்.

‘நேர்மையை முன் வைத்து தான் நாங்கள் களமாடுகிறோம். தமிழ்ச் சமூகத்தில் இந்த நேர்மை என்பது பல நூற்றாண்டுகளாக இழையோடுகிறது. ஏன், நம் சக காலத்திலேயே நேர்மைக்குப் பெயர் போன தலைவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். அப்படிப்பட்ட நேர்மையான தலைவர்களை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும் பணியைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். இது சுலபம் அல்ல. மிகவும் கடினமான காரியம் தான். ஆனால் சாத்தியமானதும் கூட. 

தமிழகத்தில் களத்தில் இருக்கும் பெரும் அரசியல் கட்சிகள், இலவசங்களை நம்பி தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால், இலவசங்கள் ஒரு நாளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது. அது எம் மக்களை என்றும் சுயமரியாதையோடு வாழ விடாது. 

எம் மக்களுக்கு வேண்டியது எல்லாம் வேலை வாய்ப்பு தான். அதை உருவாக்கிக் கொடுத்து விட்டால் அனைவரும் சுயமரியாதையோடு வாழ்க்கையை வாழ்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார். 

Trending

Exit mobile version