தமிழ்நாடு

ரஜினியுடன் பேச்சுவார்த்தையா? அரசியல் களம் காணும் சகாயம் விளக்கம்!

Published

on

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் பல கட்சிகள் தொடங்கப்படும் நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியலில் குதிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

நேற்று சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற இடத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திய சகாயம் ஐஏஎஸ் அதில் பேசியதாவது: தமிழகம் தற்போது ஊழலால் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்க புதிய மாற்றத்தை நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும்.

அரசு பணிகளில் நான் 29 ஆண்டுகள் பணியாற்றியதில் எனக்கு கிடைத்தது அவமானங்களும் பணி மாறுதலும் தான். இனிமேலும் இதற்கு மேல் தாங்கமுடியாது என்று எண்ணி தான் விருப்ப ஓய்வு பெற்றேன்.

ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. உண்மையில் நான் அவருடன் போனில் கூட பேசியதில்லை. ஊழலற்ற அரசியல் நிர்வாகத்தை கொண்டு வருவது மிகவும் கடினம். ஆனால் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.

இளைஞர்களும் பொதுமக்களும் என்னை சந்தித்து அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தியதால் ஆழமாக பரிசீலித்து தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளேன். அரசியல் களம் காண்போம் என்பதை ஆமோதிக்கிறேன்.

காமராஜர் கக்கன் அண்ணா போன்ற தலைவர்கள் நேர்மையாகவும் எளிமையாகவும் இருந்ததார்கள். சாதி மத வேறுபாடுகளை உடைத்து இருக்கும் இலட்சியவாதியாக இருந்ததார்கள். வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருந்தால் நாம் அரசியல் களம் காண்போம் என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் சகாயம் அரசியல் கட்சி தொடங்கி களத்தில் இறங்கினால் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது

seithichurul

Trending

Exit mobile version