தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி பேனரில் ‘காவி திருவள்ளுவர்’… சீமானை திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ்!

Published

on

நாம் தமிழர் கட்சியின் பேனர் ஒன்றில், காவி உடையில் உள்ள திருவள்ளுவர் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய பேனரால், பலரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை டேக் செய்து, விமர்சித்து வருகிறார்கள்.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, இந்த முறை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளது. மொத்தம் இருக்கும் தொகுதிகளில் சரி பாதி தொகுதிகளில் பெண்கள் நிறுத்தப்படுவார்கள் என்கிற அறிவிப்பையும் நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி சின்னம்’ ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாம் தமிழர் கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் மு.மகேஸ்வரி என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தொகுதியில் அடிக்கப்பட்ட பேனரில் தான், காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

போஸ்டரும் அதற்கு எழுந்த எதிர்வினைகளும் கீழ் வருமாறு:

 

seithichurul

Trending

Exit mobile version