இந்தியா

வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக மட்டும் இருங்கள்: சச்சின் டுவிட்

Published

on

வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் இதுவரை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து இன்று காலை பாப் பாடகி ரிஹானா டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார்

அந்த ட்வீட்டில் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார் இந்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரிஹானாவுக்கு பெரும்பாலானோர் ஆதரவும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் சற்று முன்னர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

அதில் வெளிநாட்டவர்கள் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு பார்வையாளராக மட்டும் இருங்கள் என்றும் எங்கள் நாட்டின் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்றும் இந்தியாவின் இறையாண்மையில் எந்த நாடும் தலையிடுவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த சச்சின் டெண்டுல்கர் ரிஹானாவின் டுவிட்டை அடுத்தே ரியாக்சனை வெளிப்படுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version