கிரிக்கெட்

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

தனக்கு கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி இருந்ததை அடுத்து பரிசோதனை செய்ததாகவும் அதில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை தவிர தனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.

இதனை அடுத்து தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும் விரைவில் குணமடைவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் அறிந்ததும் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version