இந்தியா

சபரிமலை கோவில் நடை திறப்பது எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

Published

on

ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பது வழக்கம் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான நடை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சபரிமலை கோவில் திறப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது என்பதும் கோயில் பக்தர்களுக்கு பல நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பித்தக்கது. இந்த நிலையில் மாசி மாதம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி பிறக்க உள்ளதை அடுத்து மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கொரோன வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Trending

Exit mobile version