தமிழ்நாடு

சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் சிறப்பு ரயில் அறிவிப்பு!

Published

on

சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும். தமிழ்நாட்டில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் வழித்தடத்தில் இந்த சிறப்பு ரயில் செல்லும்.

டிசம்பர் 5-ம் தேதி தொடங்கப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 9-ம் தேதி வரை இயக்கப்படும்.

ஹைதராபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை 3:50 மணிக்கு புறப்படும் சபரி மலை சிறப்பு ரயில், செவ்வாய்க்கிழமை இரவு 11:50 மணிக்கு கொல்லம் ரயில் நிலையம் சென்று அடையும். தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை இந்த ரயில் வந்தடையும்.

மீண்டும் கொல்லத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 2:30 மணிக்கு கிளம்பி ஹைதராபாத்தை வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு சென்று சேரும்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயிலை, ரயில் முன்பதிவு டிக்கெட் நிலையங்கள் மற்றும் ஐசிஆர்சிடிசி இணையதளம், செயலி மூலமாகவும் புக் செய்யலாம்.

seithichurul

Trending

Exit mobile version