இந்தியா

கர்ப்பப் பையை எடுத்தவருக்கும் சபரிமலையில் தடை: கலவரபூமியாக காட்சியளிக்கும் கேரளா!

Published

on

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா கடவுளின் பெயரால் தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது. சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்ப தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கேரள மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் கேரளா கலவர பூமியாக மாறியுள்ளது.

பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் கடந்த 2-ஆம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கேரளாவில் உள்ள இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் வன்முறையாக வெடித்தது.

144 தடை உத்தரவு, குண்டு வீச்சு, தடியடி, 1000 பேரை கைது செய்த போலீசார், 23 போலிசார் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் காயம், 99 அரசு பேருந்துகள் சேதம், 50 பாஜகவினர் வீடுகள் மீது தாக்குதல், பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு, கலவரத்தால் உயிரிழப்பு என ஒட்டுமொத்த கேரள ஊடகமும் இதையே ஒளிபரப்பு செய்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த 46 வயதான சசிகலா என்ற பெண்ணுக்கு நேற்று சபரிமலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீவிர ஐயப்ப பக்தையான சசிகலா 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு வந்துள்ளார். தனது கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக அவர் எடுத்ததற்கான மருத்துவ சான்றிதழையும் காட்டியுள்ளார்.

மாதவிடாய் நின்று போனதற்கான சான்றிதழை காட்டியும் 18 படி ஏறிய இலங்கையை சேர்ந்த சசிகலாவை ஐயப்ப தரிசனம் செய்யவிடாமல் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர் அங்குள்ள ஊழியர்கள். இதுகுறித்து தெரிவித்த சசிகலா, நான் ஐயப்பனின் தீவிர பக்தை. இவர்கள் அனைவருக்கும் ஐயப்பன் பதில் கூறுவார் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version