இந்தியா

தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்!

Published

on

சபரிமலை கோவில் தேவசம் போர்டு, பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

சபரிமலை கோவிலில் மண்டல மகர விலக்கு தரிசனம் தொடங்க உள்ள நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் அஞ்சல் துறையும் இணைந்து, தபால் மூலம் பிரசாதத்தை ஆன்லனில் புக் செய்து முறையை அறிமுகம் செய்துள்ளனர்.

இதற்கான ஒப்பந்தம், கேரள கோவிகள் துறை அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தும் ஆகியுள்ளது. ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு ஆன்லைனில் சபரி மலை பிரசாதத்தை புக் செய்யும் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்த ஒரு ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகம் மூலமாகவும், சபரிமலை பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற முடியும்.

அரவனை, நெய், விபூதி, குங்குமம், மஞ்சள் மற்றும் அர்ச்சனை பொருட்கள் அடங்கிய பேக்கெட்டின் விலை 450 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 250 ரூபாய் கோவில் நிர்வாகத்துக்கும், மீதி அஞ்சல் அலுவலகத்திற்கும் வழங்கப்பட உள்ளது. வரும் 16-ம் தேதி முதல் முன்பதிவு செய்தவர்களுக்கு விரைவு தபால் மூலமாக அனுப்பப்படும்.

ஆர்டர் செய்த 3 நாட்களில், சபரிமலை பிரசாதம் வீடு தேடி வரும்.

Trending

Exit mobile version