இந்தியா

சபரிமலையில் அமைச்சருடன் வாக்குவாதம் செய்த எஸ்பி மாற்றம்!

Published

on

சில தினங்களுக்கு முன்னர் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு சென்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நிலச்சரிவு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்களின் வாகனங்களை அனுமதிக்க முடியாது என எஸ்பி யதீஷ் சந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அமைச்சரும் அவருடன் வந்தவர்களும் சாதாரண அரசு பேருந்தில் பயணம் செய்தனர். இது பாஜகவினருக்கு அவமரியாதை என கருதிய அவர்கள் குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் தன்னுடன் வாக்குவாதம் செய்த எஸ்பி மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில் எஸ்பி யதீஷ் சந்திராவுக்குப் பதிலாக அந்த பகுதியில் உள்ள பாதுகாப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பை உளவுப்பிரிவு ஐஜி அசோக் யாதவ் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி யதீஷ் சந்திரா, அமைச்சரின் புகார் தொடர்பான விசாரணை வரும்போது தான் கருத்து தெரிவிக்கவிருப்பதாகக் கூறினார். மேலும் தற்போது சபரிமலையில் நிலைமை சுமூகமாக இருப்பதாகவும், போராட்டத்திற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லையென்றும் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version