விமர்சனம்

விக்ரமின் ‘சாமி 2’ விமர்சனம்!

Published

on

2003-ம் ஆண்டு வெளியான சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர். முதல் பாகம் திருநெல்வேலியில் இருந்த ரவுடிசத்தினை ஒழித்துக் கட்டி, தனது அப்பாவைக் கொன்றவர்களையும் கொள்ளும் ஆக்சன் திரைப்படமாக இருந்தது. முதல் பாகத்தில் நகைச்சுவை, பாடல், ஹீரோயிசம், காதல், ஆக்‌ஷன் எல்லாம் சேர்ந்த கலவையாக இருந்த சாமி இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாம்.

 

முதல் பாகத்தில் திருநெல்வேலி ரவுடிசத்தினை ஒளித்த பிறகு சொந்த ஊரான பழனிக்கு மனைவியுடன் திரும்புகிறார் ஆறுசாமி. மறுபக்கம் பெருமாள் பிச்சைக் குடும்பம் இலங்கையில் உள்ளது. அவருக்கு மூன்று மகன் ஓ.ஏ.கே.சுந்தார், ஜான் விஜய், பாபி சிம்ஹா என்று மூன்று மகன்கள்.

போலீசுக்கு பயந்து பெருமாள் பிச்சை தலைமறைவாக உள்ளார் என்று கிண்டல் செய்யக் கோபப்பட்டுத் திருநெல்வேலி திரும்பும் பாபி சிம்ஹாவும் அவரது குடும்பத்தினரும் தனது அப்பாவை ஆறு சாமி கொன்றுவிட்டதை அறிகிறார். எனவே ஆறு சாமியையும் அவரது மனைவியையும் கொன்றுவிடுகிறார். ஆனால் இவர்களுக்கு வேலுசாமி என்று ஒரு மகன் உள்ளார்.

 

பின்னர்த் திருநெல்வேலியை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் பாபி சிம்ஹா. மறு பக்கம் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் உள்ள வேலுசாமி அவரது தாத்தா டெல்லி கணேஷ் உடன் டெல்லியில் விவேக்கின் மகனாக வளர்க்கப்படுகிறார்.

மத்திய அமைச்சராக உள்ள பிரபுவிடம் முக்கியப் பொறுப்பில் உள்ள விக்ரம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றும் அதை விரும்பாமல் ஐபிஎஸ் ஆகிறார். ஆனால் திருநெல்வேலியில் போஸ்ட்டிங். டெல்லி கனேஷ் வேண்டாம் என்கிறர். ஆனால் வேலுசாமி திருநெல்வேலியில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பெருப்பேற்றாறா இல்லையா? தனது அப்பா அம்மாவைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்கினாரா இல்லையா? அதற்கிடையில் பிரபுவின் மகளான கீர்த்திச் சுரேஷ் உடன் காதல், நகைச்சுவை என்ற பெயரில் சூரி எதற்கு என்றே தெரியவில்லை. முதல் பாகத்தில் திரிஷா இருந்த கதாப்பாத்திரத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ்.

சுருங்க சொன்னால் சாமி 2 அப்பா, அம்மாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் திரைப்படமே ஆகும். காதல், நகைச்சுவை, பாடல்கள் என்றும் ஒன்றும் படத்தினை வேகமாகக் கொண்டு செல்ல உதவவில்லை. முதல் பாகத்தில் இருந்து விறுவிறுப்பு துளியளவும் இல்லை.

விக்ரமின் நடிப்பு, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படத்திற்குப் பலமாக இருக்கும் நிலை அது மட்டும் ஒரு படத்தின் வெற்றிக்கு போதாது என்பதற்குச் சாமி 2 உதாரணம் என்பதை இந்தப் படத்திற்குப் பிறகாவது ஹரி உணர வேண்டும். பாடல்களும் பெரியதாக மக்களைக் கவரவில்லை. முதல் பாகத்தில் ஹாரிஷ் ஜெயராஜ் பிரித்து மேய்ந்திருப்பார். ஸ்னேகனின் ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா’ பாடல் இன்று வரை பலருக்கு நினைவிருக்கும் நிலையில் சாமி 2 அப்படி எதையும் செய்யவில்லை என்பது மிகப் பெரிய வருத்தம்.

seithichurul

Trending

Exit mobile version