சினிமா செய்திகள்

சாஹோ உடன் போட்டிக்கு தயாரான மிஷன் மங்கள்!

Published

on

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சயின்ஸ் படமான மிஷன் மங்கள் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரபாஸின் சாஹோ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளி வருகிறது. இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதியே மிஷன் மங்கள் திரைப்படமும் வெளியாகும் என்றும், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் அக்‌ஷய் குமாருடன், வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்ஸி மற்றும் நித்யா மேனன் என நடிகையர் பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version