சினிமா செய்திகள்
டாம் க்ரூஸ் போஸ்டரை காப்பியடித்து சாஹோ போஸ்டர் வெளியீடு!
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் படம் சாஹோ.
இந்த படத்தின் முதல் போஸ்டர் பிளேட் ரன்னர் 2049 என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை காப்பி அடித்து உருவாக்கப்பட்டது என சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், மும்பை திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள படத்தின் புதிய போஸ்டர், 2013-ம் ஆண்டில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான ஆப்லிவியன் படத்தின் போஸ்டரின் அப்பட்டமான காப்பியாக உருவாகி உள்ளது.
இதனால், மீண்டும் சாஹோ போஸ்டர் சர்ச்சை சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது. ஆனால், இது ஃபேன் மேட் போஸ்டர் என பிரபாஸ் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வரும் நிலையில், திரையரங்குகளில் ஃபேன் மேட் போஸ்டர்கள் எப்படி வைக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிரம்மாண்ட பொருட்செலவில் பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் எல்லாம் வைத்து படமெடுக்கும் சாஹோ படக்குழுவுக்கு ஒரு போஸ்டரை கூட சொந்தமாக தயாரிக்க முடியவில்லையே என பிரபாஸுக்கு எதிரான ரசிகர்கள் குழு ட்ரோல் செய்து வருகின்றது.