தமிழ்நாடு

பொங்கல் தினத்தில் தேர்வு வைப்பதா? மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!

Published

on

பொங்கல் தினத்தில் தேர்வு தேதி அறிவித்த மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட உள்ளன. உழவர் திருநாளினை தமிழக மக்கள் பெரும் மகிழ்வோடு கொண்டாடும் பொங்கல் விழா காலத்தில் தேர்வு தேதிகள் தீர்மானிக்கப்பட்டு உள்ளன.
தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்களிலும் கொண்டாட்டம் தமிழ் மக்களின் வாழ்வோடும் பண்போடும் பின்னிப் பிணைந்தது ஆகும். எல்லோரும் சொந்த ஊர்களுக்கு, சொந்த கிராமங்களுக்கு போய் கொண்டாடி திரும்புவார்கள்.

அஞ்சல் ஆய்வாளர் பதவி உயர்வு தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 பொங்கல், ஜனவரி 15, 16 நாட்களும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகின்றன . சென்னையில் மட்டுமே தேர்வு மையம் சென்னைக்கு வெளியே இருப்பவர்கள் ஊருக்கு செல்லும் ஊழியர்கள் அதாவது தேர்வர்கள் ஜனவரி 14 அன்று கிளம்பினால் தான் சென்னை வந்து சேரமுடியும்.

தொடர் விடுமுறையில் பயணமே சிரமப்படும், முதல் நாள் முழுவதும் பயணித்து மறுநாள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுதுவதற்கான மனநிலை இதுவெல்லாம் பாதிக்காதா? ஏற்கனவே டிசம்பர் 18, 19 தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுதான் தள்ளி வைக்கப்பட்டு நடைபெறுகிறது.

புதிய தேதியை தீர்மானிக்கும்போது இவ்வளவு முக்கியமான விழா காலத்தை கணக்கில் கொண்டு இருக்க வேண்டாமா? தமிழ் மக்களின் உணர்வுகளையும் தேர்வர்களின் சிரமங்களையும் கணக்கில் கொண்டு தேர்வை தள்ளி வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

Trending

Exit mobile version