தமிழ்நாடு

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டவன் நான் ஒருவன் மட்டும்தான்: பெருமை கொள்ளும் எஸ்.வி.சேகர்!

Published

on

சில மாதங்களுக்கு முன்னர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் கண்ணத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரம் ஆனது.

அந்த செய்தியாளரும் ஆளுநர் தனது கண்ணத்தில் தட்டியதை விரும்பவில்லை என அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் சூடாக நடந்தது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் அந்த பெண் செய்தியாளரையும், ஒட்டுமொத்தமாக அனைத்து பெண் ஊடகவியலாளர்களையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இது செய்தியாளர்கள் மத்தியிலும், ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை கடைசி வரை காவல்துறை கைது செய்யவில்லை. இதுவும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார் எஸ்.வி.சேகர்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக சில கருத்திக்களை சொன்னார். பின்னர், எச்.ராஜா கேஸை எச்.ராஜாவே டீல் பண்ணுவார். என்மீது போடப்பட்ட வழக்கை நான் படீல் பண்ணுகிறேன். நான் வாய்த்தவறியோ, தெரியாமலோ செய்த ஒரு சிறிய தவறிற்காக தமிழ்நாட்டிலேயே செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டவன் நான் ஒருவன் மட்டும்தான். மற்றவர்கள் எல்லாரும் வருத்தம்தான் தெரிவிக்கிறார்கள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version