கிரிக்கெட்

154 ரன்கள் குவித்த ருத்ராஜ் கெய்க்வாட்: எந்த போட்டியில் தெரியுமா?

Published

on

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் 154 ரன்கள் எடுத்து உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே லீக் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மகாராஷ்டிரா அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது என்பது குறிபிடத்தக்கது.

இதில் மகாராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் 154 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றார் என்பதும் அதில் 14 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version