இந்தியா

‘ஸ்பட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி இனி சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்!

Published

on

ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்ட ‘ஸ்பட்னிக் வி’ கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீரம் நிறுவனம் தற்போது, ஆக்ஸ்போர்டு பல்கைலைக்கழகம் உருவாக்கிய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியைத் தான் தயாரித்து வருகிறது. இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் கிடைக்கும் தடுப்பூசியும் இதுவாகத் தான் உள்ளது.

இந்நிலையில் சீரம் நிறுவனத்தில் ஸ்பட்னிக் வி தடுப்பூசியும் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்திருந்தாலும், இன்னும் ஒரு சில வாரங்களில் மூன்றாவது அலை வந்துவிடும் என்று மருத்துவர்களும், துறை சார்ந்த வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள்.

மூன்றாவது அலையைத் தடுக்கும் ஒற்றை ஆயுதமாக இருந்து வருவது தடுப்பூசிகள் தான். அதே நேரத்தில் கடந்த சில தினங்களாக தடுப்பூசிகளை விநியோகிப்பதில் சுணக்கம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் ஆர்வமாக இருந்தும் கொரோனா தடுப்பூசி பல இடங்களில் கிடைக்காத சூழல் உள்ளது.

Trending

Exit mobile version