உலகம்

ரஷ்ய அதிபர் செய்த காரியத்த பாருங்க.. வைரல் வீடியோ

Published

on

உறைபனி நீரில் ரஷ்ய அதிபர் புதின் ஞானஸ்தானம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலுக்கு மத்தியல் ரஷ்ய அதிபர் புதின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. உலகத் தலைவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளபட்டு இருந்த நிலையில், புதினுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் அடைந்த எபிபனி நாளில் ரஷ்ய அதிபரும் நீரில் குளித்து ஞானஸ்தானம் எடுத்தார். ரஷ்யாவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. வெப்பநிலை மைனஸ் 17 டிகிரி அளவில் உள்ளது.

இந்த கடுங்குளிரிலும் அதுவும் 68 வயதிலும், புதின் தைரியமாக முன்வந்து நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்தார். ஞானஸ்தான நீருக்கு முன்பு பனிக்கட்டி சிலுவை இருந்தது. அரசு உயர்அதிகாரி ஒருவர் புதின் நீரில் மூழ்கி ஞானஸ்தானம் எடுத்ததை வீடியோவாக எடுத்துள்ளார். 15 நொடிகள் வரையில் ஓடக்கூடிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version