வைரல் செய்திகள்

சூட்கேஸை திருமணம் செய்த இளம்பெண்.. 90s கிட்ஸா என நெட்டிசன்கள் விசாரணை

Published

on

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் சூட்கேஸை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ரஷ்யாவில் ரெயின் கோர்டன் என்ற இளம்பெண் மனிதர்களைக் காட்டிலும் உயிரற்ற பொருட்களை அதிகம் நேசிக்கிறார். அவரது நேசம் ஒருகட்டத்தில் உச்சத்தில் செல்ல, அவர் நீண்ட நாட்களாக வைத்திருந்த சூட்கேஸையே திருமணம் செய்துகொண்டார்.

அந்த சூட்கேஸை 2015 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ராசியானதாக இருக்கும், இதனை தவறாக புரிந்துகொண்ட ரெயின் கோர்டன், சூட்கேஸை மிகவும் நேசித்து அதையே திருமணம் செய்துள்ளார். சூட்கேஸிற்கு ஜிடியான் என்றும் பெயரிட்டுள்ளார். இப்போது ரெயின் கோர்டனின் கணவர் சூட்கேஸ் ஜிடியான்.

திருமணம் செய்வதற்கு ஆளே இன்றி சூட்கேஸை திருமணம் செய்ததால் அவர் 90ஸ் கிட்ஸாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் அவருடைய பின்னணியை தேடுகின்றனர். உண்மையில் அவருடைய வயது 24. ஆனால் ஒரே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் அவருக்கு ஏற்கெனவே பாய் பிரண்ட் உள்ளார்.

அண்மைக்காலமாக உயிரற்ற பொருட்களுடன் மனிதர்கள் திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்பு பொம்மை பெண்னை ஒருவர் திருமணம் செய்தார். கேட்டால், ‘அது பொம்மை அல்ல, உண்மையாகவே அந்தப் பெண் தன்னுடன் பேசுகிறார், ஆனால் மற்றவர்களுக்கு கேட்காது’ என்கிறார். மருத்துவ ரீதியாக பார்க்கும் போது, இதனை Objectophilia என்று அழைக்கின்றனர். அதாவது ஒரு பொருள் நீண்ட நாட்களாக விரும்பும் போது இவ்வாறு ஏற்பட்டு விடுவதாக கூறுகின்றனர்.

Trending

Exit mobile version