உலகம்

உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

Published

on

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆறு நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது கடந்த 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதார தடை த,டை கச்சா எண்ணெய் ஏற்றுமதி இறக்குமதி தடை உள்பட பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யா மீது தடை மேல் தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி உக்ரைனினுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவதால் ரஷ்ய அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கும் ஆயுதங்கள் ரஷிய படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் அது அந்தந்த நாடுகளை பொறுப்பு இருக்கக்கூடும் என்றும் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version