உலகம்

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் என புதின் அறிவிப்பு: ஆனால்…

Published

on

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டாலும் இன்று ஒரு நாள் மட்டுமே போர்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது .

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 12 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள பல நகரங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணு உலையும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் முழுவதுமே ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிலுள்ள வெளிநாட்டவர்கள் மாணவர்கள் மற்றும் அப்பாவி மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வசதியாக இன்று ஒரு நாள் போர் நிறுத்தம் செய்யப் போவதாக புதின் அறிவித்துள்ளார் .

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக உக்ரைனில் உள்ள வெளிநாட்டவர் வெளியேறுமாறும், அங்கு இருக்கும் அப்பாவி பொதுமக்களும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version