உலகம்

பேச்சுவார்த்தைக்கு தயார்: மோடி அறிவுரையால் திடீரென இறங்கி வந்த ரஷ்யா!

Published

on

உக்ரைன் மீது நேற்று போர் பிரகடனம் செய்த ரஷ்யா, அந்நாட்டின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய அதிபருக்கு இந்திய பிரதமர் ஆலோசனை சொல்ல வேண்டும் என்றும் உலக அளவில் பல மிக்க தலைவராக இருக்கும் மோடி கூறினால் புதின் கேட்பார் என்றும் உக்ரைன் தூதரகம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து பிரதமர் மோடி நேற்று ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் இந்த பேச்சுவார்த்தையின் போது அமைதி முறையில் தீர்வு காண வேண்டும் என்று மோடி கூறியதாகவும் எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு அல்ல என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தாமல் இருந்தால் போரை நிறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார் .

பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே ரஷ்யா போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version