உலகம்

உக்ரைனுக்கு உதவி செய்த எலான் மஸ்க்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!

Published

on

உக்ரைன் நாட்டிற்கு தற்காலிகமாக இணையம் வழங்கி உதவி செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு ரஷ்யா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது முழுவதுமாக இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் அதிபர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிடம் பேசி டிஷ் லிங்க் மூலம் நேரடியாக ஸ்டார்லிங்க் மூலம் உக்ரைனுக்கு இணையம் கொடுக்க உதவி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து எலான் மஸ்க்கிற்கு உக்ரைன் அதிபர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சாட்டிலைட் மூலம் உக்ரைன் நாட்டிற்கு இணையம் நேரடியாக டிஷ் மூலம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதனை ரஷ்ய விஞ்ஞானிகள் மிகப்பெரிய அளவிலான ஜாமர்கள் வைத்து பிளாக் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது மீண்டும் உக்ரைனில் இணையம் செயல்படவில்லை என கூறப்படுகிறது .

உக்ரைனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இணையத்தை சாட்டிலைட்டில் இருந்து நேரடியாக கொடுத்த எலான் மஸ்க்கிற்கு ரஷ்யா கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் ஜாமர்களையும் தாண்டி உக்ரைன் நாட்டிற்கு இணையம் கொடுக்க முடியுமா என்பது குறித்து எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version