இந்தியா

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பே இல்லை: காரணம் இதுதான்!

Published

on

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இனியும் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதும், ஐந்து மாநில தேர்தல் காரணமாக தான் பெட்ரோல் விலை உயரவில்லை என்றும் கூறப்பட்டது ஆனால் ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடதக்கது .

இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யா, சலுகை விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணையை வழங்க இருப்பதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும் இந்தியாவுக்கு ரஷ்யா 3.50 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்களை சலுகை விலையில் வழங்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இது குறித்த ஒப்பந்தம் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

3.50 மில்லியன் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது என்பதும் அது மட்டுமன்றி அதற்கான காப்பீட்டையும் ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

3.50 மில்லியன் கச்சா எண்ணெய் சலுகை விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா அனுப்பிய இருப்பதன் காரணமாக இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் மாறாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version