இந்தியா

சலுகை விலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்: இந்திய, ரஷ்ய கரன்ஸியில் பரிமாற்றம்!

Published

on

இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டதாகவும் இந்த கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் அல்லது ரஷ்ய ரூபிள் பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று ரஷ்யா என்பதும் அந்நாடு அமெரிக்கா உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதனை அடுத்து அதிகப்படியாக உள்ள கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு சலுகை விலையில் விற்பனை செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் காலத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டதை அடுத்து சலுகை விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாலரில் பணபரிவர்த்தனை செய்யாமல் இந்திய ரூபாய் அல்லது ரஷ்ய ரூபிள் கச்சா எண்ணெய் பரிமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த தகவலை ரஷ்ய துணை பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இது குறித்து இந்திய அரசு கச்சா எண்ணெய் சலுகை விலையில் இறக்குமதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது

 

Trending

Exit mobile version