உலகம்

உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய ரஷ்யா: கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

Published

on

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளட்ஜஒ அடுத்து சற்று முன்னர் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் உள்ளதாகவும் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் பதட்டம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனாஸ்க் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பதிலடி தாக்குதல் ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. மேலும் ரஷ்யாவின் ஹெலிகாப்டர்களும் வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ சுரங்க பாதை உள்பட பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விமானங்கள் குண்டுமழையால் தலைநகர் கீவ் நகரில் உள்ள மக்கள் காலி செய்துவிட்டு மேற்கு எல்லையில் உள்ள நகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த செயலால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version