உலகம்

உக்ரைனுடனான போர் திடீரென நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்புக்கு காரணம் என்ன?

Published

on

உக்ரைனுடனான போர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென போரை நிறுத்த ரஷ்யா உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

உக்ரைனுடனான போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டின் அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாகவும், மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அரசு அறிவித்திருந்தாலும் மீண்டும் உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதை அடுத்து உக்ரைனில் உள்ள வெளிநாட்டவர்கள் உடனடியாக வெளியேறவும், உக்ரைன் நாட்டின் அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version