வணிகம்

இந்தியா ரூபாய் மதிப்பு சரியவில்லை.. டாலர் மதிப்புதான் உயருகிறது.. நிர்மலா சீதாராமன்

Published

on

இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் வலுப்பெற்று வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவது கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. டாலர் மதிப்பு வலுப்பெற்று வருவதாகத் தான் நான் பார்க்கிறேன்.

டாலர் மதிப்பு உயரும் போது எல்லாம் பிற நாணயங்களும் சிறப்பாகச் செயல்படுவதாகவே நான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு சரிவை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதமாக 82 ரூபாய் 35 பைசாவாக வர்த்தகம் ஆகி வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் ரூபாய் மதிப்பு 8 பைசா சரிந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version