வணிகம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரூபாய் மதிப்பு 16 மாத சரிவை சந்தித்துள்ளது!

Published

on

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 மாத சரிவுடன் 73.3 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.8 சதவீதம் சரிந்து 73.3 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் ரூபாய் மதிப்பு 1.8 சதவீதம் வரை சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கும் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும், இந்தியாவில் 3 நபர்களுக்கு கொரோனா வைர்ஸ் தாக்கியிருப்பது உறுதியானதால் தான், ரூபாய் மதிப்பு இன்று சரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவால், பெட்ரோல், டீசல் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்களை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version