இந்தியா

தடுப்பூசி போட்டபின் சிக்கன் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படுமா?

Published

on

சிக்கன் சாப்பிட்டுவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டாலோ அல்லது தடுப்பூசி போட்டபின் சிக்கன் சாப்பிட்டாலோ உயிரிழப்பு ஏற்படும் என கேரளாவில் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து பார் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகள் ஏற்பட்டது என்பதும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தினால் ஆண்மைக்குறைவு ஏற்படும் போன்ற வதந்திகள் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கு முன்போ அல்லது தடுப்பூசி போட்டதற்கு பின்போ சிக்கன் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என்று வதந்தி பரை வருகிறது.

கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தியபின் சிக்கன் சாப்பிட்ட நபர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தடுப்பூசி போடுவதற்கும் சிக்கலுக்கும் சம்பந்தமில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்று வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version