தமிழ்நாடு

9,11 வகுப்புகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளியா? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்!

Published

on

9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன


இந்த நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

மேலும் இட நெருக்கடியை தவிர்க்க காலை, மாலை என இருவகையாக பிரித்து வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்கு வரும் போது மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் வகுப்பறையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அனைத்து வகுப்புகளிலும் சானிடைசர் வசதி வைத்திருக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. மேற்கண்ட வழிமுறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

author avatar
seithichurul

Trending

Exit mobile version