வணிகம்
20 ரூபாய் நோட்டை அச்சிடுவதை விட 10 ரூபாய்க்குக் கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு!
மத்திய அரசு பண மதிப்பிழக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய 2000, 500, 200, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் அவற்றை அச்சிட எவ்வளவு செய்யப்படுகிறது என்று இந்தியா டூடே நிறுவனம் ஆரிடிஐ மூலம் கேள்வி கேட்டுள்ளது.
இந்திய டூடேவின் ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளித்த இந்திய ரிசர்வ் வங்கி 20 ரூபாய் நோட்டுகளை அச்சிடச் செலவு செய்வதை விடக் கூடுதலாகப் புதிய 10 ரூபாய் நோட்டுகளை அச்சிடச் செலவு செய்வதாகத் தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
10 ரூபாய் நோட்டு ஒன்றை அச்சிட 1.1 ரூபாயும், 20 ரூபாய் நோட்டினை அச்சிட 1 ரூபாயும், 50 ரூபாய் நோட்டினை அச்சிட 1.01 ரூபாயும், 100 ரூபாய் நோட்டினை அச்சிட 1.51 ரூபாயும், 500 ரூபாய் நோட்டினை அச்சிட 2.57 ரூபாயும், 2,000 ரூபாய் நோட்டினை அச்சிட 4.18 ரூபாய் செலவு செய்யப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பழைய 500 ரூபாய் நோட்டினை அச்சிட 3.09 ரூபாயும், 1000 ரூபாய் நோட்டினை அச்சிட 3.54 ரூபாயும் செலவு செய்து வந்துள்ளனர்.
ஆனால் இந்தத் தகவலில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை.