இந்தியா

பிரதமர் பதவியில் இருந்து கழற்றி விடப்படுவாரா மோடி? அவசர ஆலோசனையில் ஆர்எஸ்எஸ்!

Published

on

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியில் மோடி நீடிப்பாரா? அல்லது மாற்றப்படுவாரா? என்கிற ஆலோசனை ஆர்எஸ்எஸ் இயகத்தில் நடந்து வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என அனைத்து மீடியாக்களும் சொல்லி வைத்தார்போல கூறியுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள பாஜக தலைமை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. உளவுத்துறை ரிப்போர்ட்டும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்றே செய்திகள் வருகின்றன.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பொதுச்செயலர் பையாஜி ஜோஷியை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் அல்லது பாஜக கூட்டணி பலத்தில் தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் புதிய பிரதமராக நிதின் கட்கரியை கொண்டு வர ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திட்டமிடுவதாக தகவல்கள் கசிகின்ற.

சமீப காலமாக பிரதமர் பதவிக்கு மோடிக்கும் நிதின் கட்காரிக்கும் போட்டி நிலவுவதாக பலமுறை செய்திகள் வந்திருக்கின்றன. ஆர்எஸ்எஸ் ஆதரவில் நிதின் கட்காரி பிரதமர் ஆகலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதனை நிதின் கட்காரி ஏற்கனவே மறுத்துள்ளார். ஆனால் தற்போது உள்ள சூழலில் நிதின் கட்கரியை அழைத்து பையாஜி ஜோஷி விவாதித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டிருக்கின்றன. அரசியலில் இது முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version