இந்தியா

ரிசர்வ் வங்கியை பின்னணியில் இருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ்: விசிக எம்பி பகீர் குற்றச்சாட்டு!

Published

on

ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்கம் இருப்பதாக விழுப்புரம் தொகுதியின் விசிக எம்பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியானது தனது உபரி நிதியில் அரசின் பங்காக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதனை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் விழுப்புரம் விசிக எம்பி ரவிகுமார். அதில், ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள கையிருப்பிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசாங்கத்துக்கு அளிப்பதாக செய்திருக்கும் அறிவிப்பு பொருளாதாரம் தெரிந்தவர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது 3.6 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து அரசாங்கத்துக்குக் கொடுக்குமாறு பாஜக அரசு நெருக்கடி தந்தது. அப்படிச் செய்தால் ரிசர்வ் வங்கியின் தற்போதைய AAA என்ற ரேட்டிங் குறைந்துவிடும். அதனால் இந்தியா பெறும் கடன்களின் மதிப்பு அதிகமாகி சுமை ஏறிவிடும். அது இந்திய பொருளாதாரத்துக்குக் கேடாக முடியும் எனக் கூறி அவர் மறுத்துவிட்டார். அவருக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்த உர்ஜித் படேலும் மோடி அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிய மறுத்து இரண்டு ஆண்டுகளிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குப் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்கம் உள்ளது. பாஜக அரசு பொருளாதாரக் கல்விப் பின்புலம் இல்லாதவரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் நியமித்ததன் விளைவுதான் இந்த முடிவு. பாஜக அரசு பட்ஜெட் பற்றாக்குறையை சரிசெய்ய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறது, ரிசர்வ் வங்கியை சூறையாடத் தொடங்கியுள்ளது. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியை சூறையாடுவதன் மூலம் திவால் நிலையை நோக்கித் தள்ளுகிறது என்று ரவிக்குமார் எம்பி தனது பதிவில் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version