தொழில்நுட்பம்

பேடியம் அக்கௌன்ட் இல் ரூ.90,000 கொள்ளை.!

Published

on

நம்மில் பலரும் பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பண பரிமாற்ற செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். இந்தச் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பானது என்று நம்பிப் பயன்படுத்தி வந்த நமக்கு, தற்பொழுது நடந்துள்ள ஒரு சம்பவம் சற்று ஏமாற்றத்தை வழங்கியுள்ளது.

பழுதான ஒரு ஸ்மார்ட் போன்னை, சேவை மையத்தில் சரி செய்து வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட இடத்தில், அவரின் பேடியம் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டு சுமார் ரூ.90,000 வரை திருடப்பட்டுள்ளது. பழுதான மொபைல் போன்னை வைத்து இப்படிப்பட்ட மோசடி நடந்தேறியுள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

புது டெல்லியைச் சேர்ந்த யூசுப் கரீம் என்ற 28 வயது நபர் தந்து மொபைல் போன்னை சர்வீஸ் செய்து வாங்குவதற்காகச் சேவை மையத்தில் கொடுத்திருக்கிறார். ஒரே நாளில் அவரின் மொபைல் போன் சரி செய்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாளே யூசுப் இன் பேடியம் அக்கௌன்ட்டை வேறு யாரோ லாகின் செய்துள்ளதாக ஈமெயில் தகவல் அவரின் ஸ்மார்ட் போனிற்கு வந்துள்ளது.

அடுத்த சிறு வினாடிகளில் யூசுப் இன் ஈமெயில் முகவரி மாற்றப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது, அதனைத் தொடர்ந்து சிறு வினாடியில் யூசுப் இன் மொபைலிற்கு அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.19,999 வேறு ஒரு வங்கி கணக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதே போல் தொடர்ந்து அவரின் அக்கௌன்ட் இல் பணம் திருடப்பட்டிருக்கிறது. சேவை மையத்தில் மொபைல் போன் கொடுத்த பின்தான் இப்படி தனது அக்கௌன்ட் இல் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதாக யூசுப் அளித்த புகாரின் பெயரில் விசாரணை தொடங்கியது.

விசாரணையின் முடிவில் சேவை மையத்தில் பணிபுரிந்த மொபைல் சர்வீஸ் மேன், யூசுப் இன் அக்கௌன்ட் விபரங்களை மாற்றி பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களை சேவை மையங்களில் கொடுக்கும் பொழுது உங்களின் மொபைல் வாலெட் விபரங்களை அழித்துவிட்டுக் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version