தமிழ்நாடு

தமிழக அரசின் ரூ..7000 உதவித்தொகை: விண்ணப்பம் செய்வது எப்படி?

Published

on

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழக மக்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவி தொகை குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்றும் டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் ஆகியவை பயிலும் மாற்றுத் திறனாளிக்கு ஆயிரம் ரூபாய் வரை ஏழாயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

மேலும் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றாம் ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க என்ற http://www.chennai.nic.in/ இணையதளத்தை அணுகலாம் என்றும் அதில் உள்ள கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரிடம் பெற்று உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தை அணுகினால் அவர்களுக்கு உதவி தொகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version